Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சிறப்பு பேட்டி…

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சிறப்பு பேட்டி…

by ஆசிரியர்

இன்று (14/10/2020) மதுரையில் நடைபெற்று வரும் குற்றம் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கீழ்கண்டவாறு பதில் அளித்தார்.

மதுரை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். மதுரை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்த சம்பவத்தில் 20 பேர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை வழக்கில் பணியாளர் முனியசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முனியசாமி கொலை செய்யப்பட்டது தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக அனுப்ப முடிவு செய்ய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மதுரை மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

வழிப்பறி சம்பவங்களை தடுப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகள் அதிகரிப்பு,

கடத்தல் சம்பவத்தில் துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், 101 மாவட்ட காவலர்கள் கொரோனாவால் பதிக்கப்பட்டு அதில் ஒரு காவலர் உயிரிழந்து உள்ளார்.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு சாராயம் மருந்து கஞ்சா குண்டர்கள் திருட்டு மணல் திருட்டு பாலியல் குற்றங்கள் என 20 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,

மதுரை மாவட்டத்தில் காவல் நிலையங்களில் மனு விசாரணையின்போது மனுதாரர்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்க அமல்களை சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து உரிய முறையில் தீர்வு கொடுக்கப்பட்டு வருகின்றது,

மதுரை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 13/10/20 வரை 56 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தது, 2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தற்போது வரை 54 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளது சட்டம் ஒழுங்கு பணி விழும் குற்றத் தடுப்பு பணிகளிலும் போதிய அளவில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு குற்றச் சம்பவங்களை அதிகரித்த வண்ணம் மேலும் சம்பவம் நடந்தவுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன கொலை வழக்குகளில் பெரும்பான்மையான வழக்குகள் குடும்ப தகராறு, முன் பகை, சொத்து பிரச்சனை, காதல் மற்றும் தவறான தொடர்பு சம்பந்தமாக நடைபெற்றுள்ளது மேலும் 2 கொலை வழக்குகளில் இந்த வருடத்தில் ஆயுள் தண்டனை பெற்ற தரப்பட்டுள்ளது,

மாவட்டத்தில் நிலுவையில் உள்ள புகார் மனுக்களை விசாரிக்கும் விரைந்து தீர்வு காண மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து புகார் மனுக்களை விசாரிக்கும் நாளாக அறிவிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!