Home செய்திகள் யோகி ஆதித்யநாத்க்கு வளையல் போடும் போராட்டம்; நெல்லையில் பரபரப்பு..

யோகி ஆதித்யநாத்க்கு வளையல் போடும் போராட்டம்; நெல்லையில் பரபரப்பு..

by mohan

நெல்லையில் யோகி ஆதித்யநாத்க்குவளையல் போடும் போராட்டம் நடைபெற்றது.பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசு இருக்கிறது என்று கூறி ஆதித்தமிழர் பேரவையினர் யோகிக்கு வளையல் அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் எனும் பகுதியில் மனிஷா என்ற இளம்பெண் மனித மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் கற்பழிக்கப்படுவதற்கு முன்பு கழுத்து நெரிக்கப்பட்டு கை கால் முதுகு தண்டு எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு மிக மிக மோசமான கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு இருப்பது மிக மிக கண்டனத்துக்குரியது என்பதாக ஆதித்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும்,இப்படிப்பட்ட கொடூரமான படுகொலையை மூடி மறைப்பதற்கான பணியை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்து வருவது கண்டனத்திற்குரியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்ப்பதற்க்கு பத்திரிகையாளர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை என யாரையும் அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு போட்டு மிகவும் மோசமான ஒடுக்குமுறையை கையாண்டது மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்றும்,அந்த பெண் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை என்று உத்திர பிரதேச அரசு சொன்னது மிக மிக கண்டனத்துக்குரியது என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பகுதிக்கு கொலை செய்த குற்றவாளிகளின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பல நூறு பேர் சேர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை மிரட்டி வருவதை பார்க்கின்றபோது இந்த நாட்டில் கற்பழித்து படுகொலை செய்தவர்களுக்கு அரசு எவ்வளவு ஆதரவாக இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு சாட்சி என்றும் ஆதித்தமிழர் பேரவையினர் கூறினர். மேலும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த மனிஷாவின் மரணத்துக்கு தார்மீக பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்.ராகுல் காந்தியை கீழே தள்ளிவிட்டு தடியடி நடத்தி அவமானபடுத்தியதோடு பெண் என்றும் பார்க்காமல் பிரியங்கா காந்தியின் ஆடையை பிடித்து இழுத்து அராஜகம் செய்த உத்திரபிரதேச காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்,அதற்கு முழு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சிபிஐ விசாரணையை ரத்து செய்து விட்டு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உண்மை கண்டறியும் விசாரணை குழு அமைக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,மனிஷா படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் தலித் இயக்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். என்று ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு, கண்டனத்தையும் பதிவு செய்தனர். இந்த போராட்டத்தை பத்மா மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் தலைமையேற்று நடத்தினார். மா.உமா மாநகர மகளிர் அணி செயலாளர், சிறப்பு அழைப்பாளர் காலேப் மாநில துணைச் செயலாளர் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரமேஷ் அம்பேத்கர் மாநகர் மாவட்ட தலைவர், கலைக் கண்ணன் மாநகர் மாவட்ட செயலாளர், பேட்டை மாணிக்கம் மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர், நெல்லை குட்டி மாநகர தலைவர், குருராஜ் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர், ஹோண்டா ராஜ் தொழிலாளர் பேரவை துணை செயலாளர், வனராஜ் தொழிலாளர் பேரவை மாவட்ட அமைப்புச் செயலாளர், வேங்கை சரத் புறநகர் மாவட்ட செயலாளர், செண்பக மூர்த்தி புறநகர் மாவட்ட தலைவர், ரமேஷ் புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர், பொன்னையன் அம்பை ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!