Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஏர்வாடி அருகே கடல்நீரை வீட்டு தேவைக்கு உபயோகிக்கும் அவலம்.. குடத்துடன் பொதுமக்கள் போராட்டம்..

ஏர்வாடி அருகே கடல்நீரை வீட்டு தேவைக்கு உபயோகிக்கும் அவலம்.. குடத்துடன் பொதுமக்கள் போராட்டம்..

by ஆசிரியர்

கடல் தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அவலம். மூன்று மாதமாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் குழந்தைகள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம். ஏர்வாடி அருகே உள்ள சடைமுனிவலசை கிராம மக்கள் மூன்று மாதங்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது சடைமுனிவலசை. கடற்கரை கிராமமான இங்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் சரி செய்யப்படாததால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி தனியார் குடிதண்ணீர் லாரிகளில் குடம் ஒன்றுக்கு 10 ரூபாய் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு 8 ரூபாய்க்கு வாங்கி வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க முடியாத நிலையில் உள்ள சிலர் கடல் தண்ணீரை எடுத்து வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அவலநிலையும் உள்ளது.

குடிநீர் வழங்ககோரி பலமுறை ஏர்வாடி ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு கொடுத்து முறையயிட்டும் இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யாததால் இன்று அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் குடிதண்ணீர் விநியோகம் செய்யும் வரை காலிக்குடங்களுடன் அக்கிராம சாலையில் அமர்ந்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஏர்வாடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.  ஆனாலும் சாலையின் ஓரத்தில் அமர்ந்து குழந்தைகள் முதியர்வர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!