பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா ! வட்டாட்சியர் பங்கேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் , போளூர் கல்வி மாவட்டம் பாரதசாரண சாரணியர் இயக்கம் சார்பிலகாந்தியடிகளின் பிறந்தநாள் வார விழாவை முன்னிட்டு மாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வ சமய வழிபாடு மற்றும் மரக்கன்றுநடும் திட்டம் நடைபெற்றது. விழாவிற்கு போளூர் மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை ஆணையர்த கருணாகரன், மாவட்டஆணையர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாம்பட்டு பள்ளித் தலைமையாசிரியர் நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக போளூர் வட்டாட்சியர் ஜெயவேலு பங்கேற்று மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.சர்வசமய பிரார்த்தனையில்உலக நன்மைக்காக மதநல்லிணக்க வழிபாடு நடைபெற்றது. பின்னர், வட்டாட்சியர் ஜெயவேலு தலைமையில் சாரண பொறுப்பாளர்களுடன் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி வளாக பின்புறத்தில் சாரண மாணவ-மாணவியர்கள் 500க்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் வீசினர்.நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு ஆணையர்கள் ஏழுமலை,அமிர்தா, மாவட்ட பயிற்சி ஆணையர்கள் ரமேஷ் , ஜமுனாராணி, மாவட்ட துணை செயலாளர் சகிலா,மாவட்ட தலைமையிட ஆணையர் கவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்ற போளூர் கல்வி மாவட்ட முதன்மை ஆணையர் கருணாகரன் பாரத சாரண இயக்க மாவட்டச் செயலர் தட்சிணாமூர்த்தி சால்வை அணிவித்து பாராட்டினார். சாரணர் இயக்க சார்ந்தவர்களுக்கு அடையாள அட்டை, முகக்கவசம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாரத சாரண இயக்க மாவட்டச் செயலர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார் நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வு சமூக இடைவெளி கடைபிடித்து நடைபெற்றது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..