கீழக்கரையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புப் பற்றி விழிப்புணர்வு முகாம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப் பகுதியிளில் இன்று 29.9.2020 ராமநாதபுரம் மாவட்டத் தலைமை நீதிபதி மகிழேந்தி, சட்ட பணி ஆணையக் குழு தலைவர் ரங்கராஜ், மற்றும் கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலையில் ஏர்வாடி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்புக்குழுவினர் வருவதற்கு முன்பு பொதுமக்கள் எப்படி காப்பாற்ற வேண்டும் என்று செய்முறை செய்து காண்பித்தனர்.

ஏர்வாடி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு நிலைய அலுவலர் சண்முகராஜா தலைமையில் காவலர்கள் சண்முகவேல், மோகன்,இசக்கி பாண்டி, காந்தி,கோபி, தண்டார ராம்கி, பரமசிவம், ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் எப்படி உதவ முன்வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உடன் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராம நிர்வாக அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலர்கள் கீழக்கரை சுகாதார ஆய்வாளர் பூபதி சுகாதார மேற்பார்வையாளர் சக்தி, பாலா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image