வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 34 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாடோல்கேட்டில் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சென்னை – பெங்களூரு சாலையில் டோல்கேட்டை கடந்து ஒரு லாரி வேகமாக சென்றது. அதை மடக்கி விசாரித்த போது அதன் டிரைவர் ஆட்டா மாவு இருப்பதாகவும் அதற்கான டிரிப் சீட்டை காண்பித்தார். அதில் விவரம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சோதனை செய்தபோது ரேசன் அரிசி என்று தெரிய வந்தது. அதற்குள் டிரைவர் தப்பி ஓடினான. லாரியில் இருந்த 19 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதேப்போல் அப்துல்லாபுரம் அம்மன் கோவில் பின்புறம் காலி மனை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் 34 டன் ரேசன் அரிசி வேலூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கே.எம்.வாரியார் வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..