இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மீன்பிடிப்பு குறித்த விழிப்புணர்வு.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் உள்ள கே.கே பட்டிணம் மீனவ கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் மீனவர்களின் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மீன்பிடிப்பு குறித்த இணையவழி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.இதில் தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தின் மீன்வளகாப்பகம் மற்றும் தொழிற்பயிற்சி இயக்குனரகம்  இராமநாதபுரம் மைய அரியமான் பகுதியில் அமைந்துள்ள மையத்தின் உதவி பேராசிரியர் கலையரசன் அவர்கள் மீன்களை பிடிப்பது, அவற்றை சுகாதாரமான முறையில் பதப்படுத்தி கொண்டுவருவது மற்றும் விற்பனைக்கு அனுப்புவது வரையிலான கருத்துக்களை கருத்துப்படங்கள் மூலம் விளக்கினார்.ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மாவட்ட மேலாளர் கிருபா தொகுத்து வழங்கினார்.புதுப்பட்டிணம் கூட்டுறவு சங்க தலைவர் உதயணன், கிராம முன்னோடி ராஜசேகர், துரைமுருகன் உட்பட  ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியை கோரல் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதி ரிலையன்ஸ் அறக்கட்டளை இராமு ஆகியோர் செய்திருந்தனர்