மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வயதான தம்பதியினர்.காப்பாற்றிய பத்திரிக்கை நண்பர்கள்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை, தன் பேரனுக்கு எழுதி வைத்துவிட்டாராம்..இதனால் கோபமடைந்த பாண்டியன் மகன் சந்திரசேகரன், பாண்டியன் மற்றும் அவரது மனைவியை சொத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறாராம்.இதனால் மனமுடைந்த பாண்டியன் செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த. நியூஸ்_ஜெ மதுரை தலைமை நிருபர் நவநீத கிருஷ்ணன் மற்றும் வணக்கம் இந்தியா நிருபர் அருள்ராஜ் துரிதமாக செயல்பட்டு தீக்குளிக்க முயன்ற அவர்களை தடுத்து நிறுத்தினர் பின் அங்கு இருந்த காவல் பணியில்போலீஸார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது துரிதமாக செயல்பட்ட பத்திரிக்கையாளர்கள் வயதான தம்பதியினர் தற்கொலைக்கு முயன்ற அதிலிருந்து இருந்து காப்பாற்றியது அங்குள்ள பொதுமக்கள் பாராட்டி சென்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்