உசிலம்பட்டி பகுதியில் கருகல் நோய் தாக்குதலால் கத்திரிக்காய் விவசாயம் பாதிப்பு. விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி, உச்சப்பட்டி, அம்பட்டையம்பட்டி, கன்னியம்பட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் கத்திரிக்காய் செடிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் கத்திரிசெடிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் பாய்ச்சி, மருந்துதெளித்து கத்திரி செடிகளை பாதுகாத்து வந்ததால் கத்திரிக்காய் நல்ல விளைச்சலை கண்டுள்ளது.

மேலும் உசிலம்பட்டி சந்தையில் கத்திரிக்காய் 1கிலோ ரூ.50 விலை போகும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டிப் பகுதியில் தொடர் சாரல் மழை பெய்ததால் கத்திரிசெடியில் உள்ள காய்களில் கருகல் நோய் தாக்கி கத்திரிக்காயில் வட்டவட்டமாக கருப்பாக தோன்றி கத்திரிக்காய்கள் அனைத்தும் அழுகிய நிலையில் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் கத்திரிக்காயில் ஏற்பட்ட பாதிப்பை கண்டறிந்து விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா