அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும், 10 நாட்கள் கொண்டாடப்படும் தீபத்திரு விழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் மற்றும், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இதை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்தாண்டு கொரோனாவால், தீபத்திருவிழா அரசு விதிக்கும் நிபந்தனையின்படி வரும் நவ.,17ல், துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி, 29ல், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க வரும், 28ல், காலை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள், கன்யா லக்னத்தில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா நடைபெற்றது. பந்தக்கால் முகூர்த்த விழாவில்,மாவட்ட ஆட்சித்தலைவர் கே எஸ் கந்தசாமி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கொரோனா காரணமாக, பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை, குறைந்த எண்ணிக்கையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் முறைதாரர்கள் மட்டுமே முக கவசம் அணிந்து கொண்டு, கலந்து கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image