வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில்  மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் தலைமையிலும், கீழக்கரை நகர் இளைஞரணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் அனைத்து தோழமைக் கட்சிகள் நகர் செயலாளர் முன்னிலையிலும் விவசாயிகளை சிறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய மாநில அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழக்கரை திமுக நிர்வாகிகள், இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்,மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image