சுரண்டை பகுதியில் ஆன்லைன் மூலம் திமுகவில் இணையும் விழா;மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த எல்லோரும் நம்முடன் திட்டத்தில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து இணைவதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தெரிவித்தார்.சுரண்டை பேரூர் கழகம் சார்பில் எல்லோரும் நம்முடன் திட்டத்தில் ஆன்லைன் மூலம் திமுக-வில் இணையும் விழா நடைபெற்றது. நகர செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பூல் பாண்டியன், சங்கரநயினார், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி,அவைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தை சேர்ந்த ராஜவேல், அபிஷேக் ஆகியோர் வரவேற்றனர். திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது திமுகவில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து இணைகின்றனர். மேலும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களால் தாமாகவே முன் வந்து தங்களை திமுகழகத்தில் இணைத்துக் கொள்வதாக தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் சசிகுமார்,சீனிவாசன், வைகை கணேசன்,சாமுவேல் மனோகரன்,ராஜேந்திர செல்வன், ஆறுமுகசாமி, வெங்கடேசன்,அரவிந்த் சிதம்பரம்,  மாடசாமி,பட்டு  கார்த்திக், பிரம்மா,மாரியப்பன், முருகன், முத்துக்குமார்,விமல் ஆனந்த், பவுன்ராஜ்,நயினார்,சந்திரன், சங்கரேஸ்வரன்,கோமதிநாயகம், பிரேம்குமார்,செல்வகுமார், முருகன், குலசை ரவி,ஜெகன்,இன்பா, சுரேஷ் கண்ணா,கணேசன், ரவிக்குமார், காசிராஜன் மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image