திருப்பரங்குன்றம் சிந்தாமணி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வாங்கி அதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியல்.

திருப்பரங்குன்றம் சிந்தாமணி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வாங்கி அதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியல்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் சுங்கச் சாவடி உள்ளது.இதில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதி முறைகளை மீறி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திடீரென சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.இதனையடுத்து தகவலறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் அவனியாபுரம் காவல் துறையினர் அவர்களை சமரசம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.இதனால் இந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image