உப்பூர் அருகே பரிதாபம்.. பைக்குகள் நேருக்கு நேர் மோதல்…. 3 பேர் பலி…

இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே நாகனேந்தல் பகுதியில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகினர்.

மேலும் 2 பேர் படு காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். கருங்குடி காளீஸ்வரன் மகன் டிரைவர் பாண்டித்துரை 32 சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருடன் டூவீலரில் சென்ற அத்தானூர் கார்மேகம் மகன் உதயக்குமார் 37 படுகாயமடைந்தார். மற்றொரு டூவீலரில் வந்த தேவகோட்டை கைலாசபுரம் தாமரைக்கனி மகன் ஹரிகரன் 19, செந்தில் குமார் மகன் வல்லரசு 19 ஆகியோர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த ஆதி நாராயணன் மகன் 19 கௌதம் படுகாயமடைந்தார். காயமடைந்த உதயக்குமார், கௌதம் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.