மனைவியை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் கணவன் புகார் – மனைவியை தன்வசப்படுத்திக் கொண்ட கும்பலிடமிருந்து காப்பாற்ற கணவன் , காவல் நிலையத்தில் தஞ்சம் .

  மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்துவரும் ராஜேஷ் (26)என்ற நபருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர் . ராஜேஷ் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தனது மனைவி கனிமொழி மூன்று வருடங்களாக கர்ப்பமாகாமல் உள்ள நிலையால், மருத்துவரை கண்டு பரிசோதித்ததில் , கனிமொழிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உள்ளதாகவும் , அதனை குறைப்பதற்கு உடற்பயிற்சி கூடத்தை நாடியுள்ளனர் . மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் கனிமொழி சேர்க்கப்பட்டு , அங்கு பயிற்சி மேற்கொண்டபோது யோகேஷ் கண்ணா – விற்க்கும், கனிமொழிக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது .இதனை தொடர்ந்து கனிமொழியின் கணவர் கண்டித்துள்ளார் இதை பெருக்க முடியாமல் கனிமொழி உடற்பயிற்சி கூடம் நடத்தும் உரிமையாளர் யோகேஷ் கண்ணனுக்கு போன் செய்து விட்டுக்கு அழைத்ததாகவும் உடனே மூன்று இரு சக்கர வாகனத்தில் 5 பேர் உடன் வந்து ராஜேஷ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டில் தங்கநகை மற்றும் கனிமொழியை கடத்தி சென்றதாகவும் மேலும் யோகேஷ் கண்ணா ராஜேஷிடம் தொடர்புகொண்டு, உனது மனைவியை உனக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்றால் ,ரூபாய் 5 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியதாக , பெருங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .புகாரின்பேரில் டிஎஸ்பி வினோதினி ராஜேஷ் ,கனிமொழி, மற்றும் யோகேஷ் கண்ணன் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image