நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வெறையூர் பகுதியில, நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தண்டராம்பட்டு அடுத்த வெறையூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் முன்பு இளைஞர் முன்னணி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர் நடிகர் சூர்யாவை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சூர்யாவை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட இந்து இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் கண்டன கோஷங்களும் முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் கூறுகையில், “நடிகர் சூர்யா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், மாணவர்களின் மனதில் இருக்கும் தன்னம்பிக்கையை சிதைக்கும் விதமாக , நஞ்சை விதைக்க கூடாது. மாணவர்களின் மத்தியில் தற்கொலை
எண்ணத்தை தூண்டிவிட்டு அவர்களின் வாழ்க்கையை அழிக்கக் கூடாது. நீட் தேர்வு குறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து விளம்பரம் தேட நினைக்கும் சூர்யா அவரது நடிப்பை மட்டும் பார்த்தால் நன்றாக இருக்கும்!. மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களின் பெற்றோர்தான் முடிவு எடுக்க வேண்டும், சூர்யா போன்ற நடிகர்கள் தனிமனிதர்களுக்கான கருத்தைக் கூறி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. என்றார்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image