உசிலம்பட்டி அருகே குடும்பிரச்சனையில் இளம்பெண் ஆறுமாத குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டியைச்; சேர்ந்த அன்னக்கொடி மகன் ரவீந்திரந்திரனுக்கும் (28) வின்னக்குடியைச் சேர்ந்த முத்தையா மகள் லெட்சுமிக்கும் (25) கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு ஆறுமாத பெண்குழந்தையும் உள்ள நிலையில் கணவன மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவர் ரவீந்திரன் முறுக்கு போடும் தொழிலுக்கு மகாராஷ்டிரா சென்று விட்ட நிலையில் லெட்சுமி தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.; லெட்சுமியை விவாகரத்து செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லெட்சுமி ஆறுமாத குழந்தைக்கு விஷம் குடிக்க வைத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வாலாந்தூர் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லெட்சுமியின் தந்தை தனது மகளை வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதால் தான் தற்கொலை செய்துள்ளதாக கூறி வாலாந்தூர் போலிசிடம் புகார் கொடுத்துள்ளர். இது குறித்து வாலாந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பிரச்சனையில் இளம்பெண் ஆறுமாத குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image