பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்-தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்…

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பொது மக்களுக்கு மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட மாரிகுமார் மற்றும் தென்காசி மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட இசக்கிமுத்து ஆகியோர் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். பழனி நாடாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது அவர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பழனி நாடார் மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வி,ஜிஎஸ்டியால் நலிவடைந்த சிறு தொழில்கள்,ராகுல் காந்தி கொரோனா குறித்து ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் அரசுக்கு கொடுத்த எச்சரிக்கையை மத்திய பாஜக அரசு மதிக்காததால் இன்று 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்க்கு பலியாகி உள்ளது குறித்தும், விவசாயிகளை பாதிக்கும் மசோதா குறித்த விழிப்புணர்வையும், பொது மக்களுக்கு மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.மேலும் 13 உயிர்களை பலிகொண்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மாணவர் காங்கிரஸ் தொடர்ந்து போராட வேண்டும் என்றார். அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபு, ராஜேந்திரன், நாட்டாமை ராமராஜ், அரவிந்த் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image