கீழக்கரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது.. காவல்துறை அதிரடி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில நாட்களாக கடைகளை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையனை என்று கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமையிலான தனிப்படை சார்ந்த  சார்பு ஆய்வாளர் சரவணன், குற்றப்பிரிவு தலைமை காவலர் கலைமன்னன், தலைமைக் காவலர் இளமுருகன், காவலர் சவுந்தரபாண்டி, காவலர் ஜெய கனேஷ், திருமுருகன், தினகரன், ஆகியோர்
கீழக்கரை சேர்ந்த முகைதீன் மதார் சாகிபு மகன் பாரிஸ் கான் என்பவரை  கைது செய்தனர்.

கொள்ளையனிடமிருந்து 21 செல்போன்கள், 1வாட்ச், 1சைக்கிள், கடையை உடைப்பதற்கு பயன்படுத்திய இரண்டு ஆயுதங்களையும் கைப்பற்றினர். விசாரணையில் இவர் மீது தமிழகத்தில் பல இடங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு உள்ளது தெரியவந்தது.  அதில் கீழ்கண்ட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது:-

கீழக்கரை 3
ராமநாதபுரம் நகர் 2
ராமேஸ்வரம் நகர் 1

பரமக்குடி நகர் 2
திண்டுக்கல் 1
திருச்சி 5
திருவரப்ரூர் 1

திருப்பவனம்1

கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image