உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்தில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்தின் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டதுறை ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

இதில் சீமானுத்து ஊராட்சிட்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5வயது வரை உள்ள பெண்குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்இளம்பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் சாப்பிடுவது, ஊட்டசத்து நிலையை உயர்த்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. அதனைதொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் சாப்பிடகூடிய உணவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image