சுரண்டையில் கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும்-வீ.கே.புதூர் தாலுகாவில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை…

கொரோனா தொற்று பரவல் காரணமாக திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடத்த தென்காசி aமாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மரகதநாதன் தலைமையில் நடந்தது.வீகேபுதூர் தாசில்தார் முருகு செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள், தலைமையிடத்து துணை தாசில்தார் சுடலைமணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் சுரண்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் சுரண்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைக்க வேண்டும், நல்ல சமாரியன் கிளப் மற்றும் ஓய்எம்சிஏ சார்பில் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க வேண்டும், சுரண்டை சேர்ந்தமரம் சாலையை இன்னும் அகலப்படுத்த வேண்டும், எனவும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை பெறுதல் தொடர்பாக மொத்தம் 21 மனுக்கள் வரப்பெற்றதாகவும் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதே போன்று ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும் எனவும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம். என உதவி ஆட்சியர் மரகதநாதன் தெரிவித்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்தி

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image