நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் சமையலர் பணி…

திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் சமையலர் பணிக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் (ஆண்,பெண்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சமையலர்
காலியிடங்கள்: ஆண் 3, பெண் 3
சம்பளம்: மாதம் ரூ.15,700

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.07.2020 தேதியில் SC/ST-18 முதல் 35, BC,BCM, MBC,& DNC-18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளுடன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் நேரில் பெற்று அதனை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 01.10.2020 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image