திருப்பரங்குன்றம் அருகே பனையூரில் கர்பிணி பெண்கள், குழந்தைகளுடன் வந்த தாய்மார் களக்கு சந்தனம், ரோஜா பூவுடன் பாட்டு பாடி வரவேற்ற அங்கன் வாடி பணியாளர்கள்.

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டசத்து மாத விழாவையொட்டி இலவசமாக பேரிச்சம் பழம், கடலை, எள்ளு மிட்டாய்களுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பனையூர் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சந்தனம் பூக்கள் கொடுத்து கர்பிணி பெண்கள் குறித்து பாட்டு பாடி வரவேற்ற அங்கன்வாடி பணியாளர்கள்.

இதில் கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு ஊட்ட சத்து குறித்து விழிப்புணர்வு , மற்றும் பிரமிடு உணவு வகைகள், கீரைகள், கருவுற்ற நாள் முதல் 1000 நாட்கள் என கோலங்களால் கண் காட்சி ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் குழந்தைகள் நலதிட்ட அலுவலர் வித்யா தலைமையில் திருப்பரங்க்லறம் வட்டார துணை அலுவலர் ரோஷினி முன்னிலையில் மேற்பார்வையாளர் சீதாரமணி துவங்கி வைத்தார்.
பனையூர் ஊராட்சி தலைவர் அகிலா ராணி கிளியன் மரக்கன்றுகள் வழங்கினார் .மனித நேய பாதுகாப்பு அமைப்பு தலைவர் அசோகன் ஊட்டச்சத்து மிக்க கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பேரிச்சம் பழம் உணவுப்பொருட்களை வழங்கினார், அங்கன்வாடி பணியாளர் காளீஸ்வரி நன்றி கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image