Home செய்திகள் புதிய வேளாண் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்ததை அதிமுக ஆதரிப்பது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் திட்டமே-தமிழக முதல்வர்

புதிய வேளாண் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்ததை அதிமுக ஆதரிப்பது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் திட்டமே-தமிழக முதல்வர்

by mohan

மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி . பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு-தற்போது தமிழகத்தை பொறுத்த வரை கொரான தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் கொரானா உள்ள அந்தந்தப் பகுதிகளில் விரைவாக செயல்பட்டு கொரானா தொற்றை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.மருத்துவக் குழுவினரின் ஆலோசனைப்படி தமிழக அரசு கொரான பரவலை தடுக்க மக்களிடம் கை கழுவுதல், முக கவசம், சமூக இடைவெளி சுத்தமாக வைத்திருத்தல் போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செயற்படுத்தி இதனால் கொரான தாக்கம் படிப்படியாக குறைந்து உள்ளது.இதுவரைக்கும் தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 54 ஆயிரத்து 233 பேர் பாதிக்கப்பட்டனர்.இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்தி ஏழு பேர் சிகிட்சை பெற்று வீடு திரும்பினர்.இதுவரை கொரானா தாக்கத்தால் 8871 பேர் இறந்துள்ளனர்.நேற்றைய பாதிப்பு 5 534.நேற்று குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 5492.சிகிச்சை பெறுவோர் 46 ஆயிரத்து 497 பேர்.இதுவரை 65 லட்சத்து 56 ஆயிரத்து 328 பேருக்கு கொரான தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

புதிய வேளாண் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்ததை அதிமுக ஆதரிப்பது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் திட்டமே.இது ஏற்கனவே 2019 கொண்டு வந்த தமிழக அரசின் வேளாண் விளைபொருள் விற்பனை சந்தை திட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது.இதுவே விலை வீழ்ச்சியை தடுக்கும் விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் அவர்களின் பொருட்களை நேரடியாக விற்பனை முடியும்.விவசாயிகள் தனியாக விற்பனை செய்து கொள்ளலாம்.மேலும் பயிர் காப்பீடு ,உணவு பதப்படுத்துதல், மேலும் கிராம புற வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.போக்குவரத்து அமை கட்டணம் ஆகியவை குறையும்.மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டுமே சந்தை வரி வசூலிக்கப்படுகிறது.பஞ்சாப் ,ஹரியானா போன்ற மாநிலங்களில் 8 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் மசோதா திட்டத்தின் மூலம் இந்த ஒரு சதவீத வரி கூட செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஒழுங்குமுறை கூடத்தில் ஒரு சத கட்டணத்தை மட்டுமே வசூல்.தமிழகத்தைப் பொருத்தவரை 282 ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபத்தை பெறலாம்.சிலர் தனியாகவும் விற்பனை செய்து வருகின்றனர்? பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும்கூட இந்த சட்டத்தில் ஒரு குறையும் இல்லை.தானியங்கள் தக்காளி உருளை போன்றவற்றை பதப்படுத்தி நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும் கடைசியில் என்ன சொன்ன இதனை கருத்தில் கொண்டே அதிமுக அரசு அம்மாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.மதுரை 2வது தலைநகர் கோரிக்கைக்கு அனைத்து அமைச்சர் களும் இதே கோரிக்கை வைப்பதல் 20 தனை தலைநகரமா வரும் என பழனிசாமி கூறினார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!