கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் பல் வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை மனு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி கீழக்கரை நகராட்சி ஆணையாளரிடம் வடக்கு தெரு சமூக நல அமைப்பு, கீழக்கரை தவ்ஹீத் ஜமாத், விடுதலை சிறுத்தை கட்சி, கீழக்கரை நகர் திமுக, கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம், பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் சார்பாக கடந்த சில நாட்களாக கோரிக்கை மனு வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கீழக்கரை ஜெட்டி பாலம் அருகே சுற்றித் திரிந்த தெருநாய் சிறுமியைக் கடித்து இரத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார், அதேபோல் சில வருடங்களுக்கு முன்பு ரயான் எனும் சிறுவன் நாய் கடிபட்டு இறந்த சம்பவத்தையும் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

இது சம்பந்தமாக  நகர் திமுக சார்பாக நகர் செயலாளர் பசீர் அகமது,  நகர் இளைஞரணி பொருப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,  மாவட்ட பிரதிநிதி மரைக்காயர், மக்கள் டீம் காதர், இளைஞர் அணி பயாஸ், மற்றும் நயீம் உடன் இருந்தனர்.

அதே போல் விடுதலை சிறுத்தை கட்சிகள் மனு அளிக்கும் பொழுது கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இலியாஸ் மற்றும் ஏனைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு சார்பாக அவ்வமைப்பின் பொறுப்பாளர் பசீர் அளித்தார்.

கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், கீழக்கரை நகராட்சி முற்றுகை போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..