புதிய விவசாய சட்டத்தால் வரிகள் குறையும் -பாஜக மாநில தலைவர்

மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் பாராளுமன்றத்தில் 2 புதிய விவசாய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு இந்தியா. புதிய விவசாய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி. புதிய விவசாய சட்டத்தால் வரிகள் குறையும். புதிய சட்டத்தால் நேரடி வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். புதிய சட்டத்தால் வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும். புதிய சட்டத்தால் இடைத் தரகர்கள் முறைக்கு வாய்ப்பு இல்லை. விளை பொருட்களை கள்ள சந்தையில் பதுக்க முடியாது. விவசாயிகளுக்கு அதிக லாபத்தை புதிய சட்டம் வழங்கும். விவசாய ஒப்பந்தம் உள்ளூர் மொழிகளில் இருக்கும்.புதிய விவசாய சட்டத்தால் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதனை தீர்க்க உள்ளுர் குழுக்கள். மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் குறைகள் தீர்க்கப்படும். புதிய சட்டங்கள் வரவேற்க்க வேண்டிய ஒன்று. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தவறாக பிரச்சாரம் செய்யபடுகிறது. புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்தில் 41 இலட்சம் விவசாயிகளுக்கு கிஷான் திட்டம் கொடுக்கப்படுகிறது. விளைவிக்கும் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்தவே புதிய சட்டங்கள். விவசாயிகள் மட்டுமே விலையை நிர்ணயிக்க முடியும்.கிஷான் திட்ட மோசடியில் தமிழக அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிமுக – பாஜகவுக்கு இடையே எந்தவொரு மனக்கசப்பும் கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடரும். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரின் நிலைபாட்டை தொடர்ந்தே நடவடிக்கைகள் தெரியும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image