Home செய்திகள் மதுரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுதிறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறப்பு விழா

மதுரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுதிறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறப்பு விழா

by mohan

மதுரை ஐயர் பங்களாவில் தமிழக மாற்றுதிறனாளிகள் சமூக கூட்டமைப்பின் சார்பாக முப்பெரும் விழா மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வழக்கறிஞர் முகமது அனஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து தவழும் நிலையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் வாய்ப்பு பெற்று “மாற்றுத்திறனாளிகள் தொழில் கூடம்” திறந்து வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகிகள், மாநகர, நகர நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு தொடந்து உறுதுணையாக இருந்த சாதனையாளர்களுக்கு “உதவிக்கரம் விருது” வழங்கி கெளரவிக்கப்பட்டது.

*முப்பெரும் விழாவிற்கு மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். K. சுனாமி செந்தில் தலைமை ஏற்றார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கூட்டமைப்பின் மாநில தலைவர் . வழக்கறிஞர். திண்டுக்கல். M. முகமது அனஸ் கலந்து கொண்டு நலத்திட்டங்கள், விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் …மேலும் விழாவிற்கு மாநில செயலாளர். சோலார்.K S. செந்தில் குமார், மாநில துணை செயலாளர். J. தர்மராஜ் , மாநில செயற்குழு உறுப்பினர். . நூரி சல்மா, சிவகங்கை. மாவட்ட தலைவர். பேராசிரியர். சந்திர சேகர் ஆகியோர், மதுரை மருத்துவக் கல்லூரி தலைமை டாக்டர். J.R. விஜயலட்சுமி , உலக சித்தர்கள் ஞானபீடம் தலைவர். இரத்னமாணிக்கம், மதுரை உதவும் உறவுகள் நிறுவனர். வழக்கறிஞர். முகமது ஜமால், J.A.M. அரபிக் கல்லூரி நிறுவனர். S.M. அல்தாப் அலி , மதுரை. வழக்கறிஞர். பாண்டிய ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பின் மாநில தலைவர். வழக்கறிஞர். திண்டுக்கல் முகமது அனஸ், கொரோனா கால கட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது.ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், வசதி படைத்தவர்களும் எங்களின் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை ஏறெடுத்தும் பார்க்காத அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

பொருளாதார பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் சட்ட பாதுகாப்பு என்பது நாடு முழுவதும் இல்லாத சூழ்நிலையில் தான் இருக்கிறது … எனவே மேற்படி உள்ள சூழ்நிலையில் நம் சமூகத்தின் மாற்றத்தில் நமது கூட்டமைப்பு எப்போதும் முதன்மையில் நிற்க்க தயாராக இருக்கிறது … அதை நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அமைப்புக்கள் அனைவரும் நமது கூட்டமைப்பிற்க்கு ஆதரவு கொடுத்து இணைந்து செயல்பட்டால் நமக்கான உரிமைகளை நாம் உடனே பெற இயலும் … எனவே நமது ஒற்றுமையை ஓங்க செய்ய மற்ற அமைப்புகளுக்கு நம் கூட்டமைப்பில் சகோதர அமைப்பாக இணைந்து பணியாற்ற மாநில தலைமை சார்பாக அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்தார் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!