நீட் தேர்வை தடை செய்யதவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலர் நெல்லை பைசல் பேசினார். அவர் பேசுகையில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வருவதின் மூலம் தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விடும். எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக மக்களால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நீட் தேர்வைமத்திய அரசு கட்டாயமாக கொண்டு வந்து மருத்துவ கனவுடன் படிப்பைத் தொடர்ந்த மாணவர்கள்
நீட் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து வித ஆக்க பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் உடன் மாவட்ட தலைவர் முகமது அயூப் கான், மாவட்ட செயலர் ஆரிப் கான், பொருளாளர் ரகுமான் அலி, மாவட்ட துணைத்தலைவர் முகமது பஷீர், மாவட்ட துணை செயலர்கள் தஸ்தகீர், மன்சூர் அலி, சுல்தான், சகுபர் அலி, ஜியா உல் ஹக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image