கருக்கட்டான்பட்டியில் தனியார் பைணான்ஸ் நிறுவனத்தினர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய பணத்திற்கு கூடுதல் வட்டி கேட்டு பெண்களை மிரட்டியதாக புகார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டான்பட்டியில் உள்ள மகளிர் சுய உதவி குழு (சாடின்) பெண்களுக்கு உசிலம்பட்டி தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு கடனுதவி வசதி ஏற்படுத்தப்பட்டு சுய உதவி குழு பெண்களுக்கு கடன்வசதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் பைனான்ஸ் நிறுவனமும் கடன் தொகையை கட்ட சொல்லவில்லை என கூறப்படுகிறது.ஆனால் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் ஏறபட்டதை தொடர்ந்து பைனான்ஸ் நிறுவனம் ஆறு மாதம் கட்டவேண்டிய பணத்திற்கு வட்டியுடன் அசல் பணத்தையும் அபராதத் தொகையாக கூடுதல் வட்டி சேர்த்து கட்ட சொல்லி மிரட்டுவதால் பணம் வாங்கிய பெண்கள் என்னசெய்வதென திகைத்துள்ளனர். மேலும் கடன்வசதி பெற்ற பெண்கள் காலக்கெடு கேட்டாலும் அதற்கு மறுக்கும் நிறுவனம் உடனடியாக கூடுதல் வட்டி அசலுடன் பணத்தை கட்ட சொல்லி மிரட்டுவதால் பெண்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டும் பைனான்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image