திருவண்ணாமலையில் தேர்தல் முறையில் மாற்றம் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரியும் தேர்தல் முறையில் மாற்றம் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில சட்டத்துறை செயலாளர் லாரன்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாலிக் பாஷா, மாவட்ட துணை செயலாளர் அப்ரோஸ் கான் மற்றும் செங்கம் நகர செயலாளர் பர்மான்ல்லா முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். அன்சர் மில்லத் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வர வேண்டும், மற்ற நாடுகளை பின்பற்றுவது போல்வாக்குச் சீட்டு முறை பின்பற்ற வேண்டும், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், புராண காலத்தில் நலிவடைந்த ஏழை எளியவர்களுக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என்றும் குளிக்க வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்ராஜ், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் முஸ்தாக், தமிழக மக்கள் தானே கட்சியின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பர்க்கதுல்லா, முகமது பைசல், அப்துல் நிஷாத், தீபக், அப்துல் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் சமூக இடைவெளி கடைப்பிடித்து நடைபெற்றது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..