மண்டபத்தில்பிரதமர் மோடி பிறந்த நாள்.பாஜக., இளைஞரணி ரத்த தானம்

பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளையொட்டி,ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஒன்றிய பாஜக., இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம் மற்றும் கட்சி கொடி ஏற்று விழா நடந்தது. மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த ரத்த தான முகாமிற்கு மண்டபம் கிழக்கு மண்டல் தலைவர் வி.எம்.கண்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.அய்யப்பன் வரவேற்றார். பாஜக., இளைஞரணியினர் 70 பேர் ரத்த தானம் செய்தனர். டாக்டர் பாக்யநாதன் தலைமையில் அரசு ரத்த வங்கி பணியாளர்கள் ரத்தம் சேகரித்தனர். மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகம் மாவட்ட தலைவர் கே.முரளிதரன், மாநில இளைஞரணி பொதுச்செயலர் ஆத்மா கார்த்தி, மாநில மீனவர் அணி செயலர் எஸ்.நம்புராஜன் , தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டபம் ஒன்றிய தலைவர் பி.முத்துக்குமார், துணை தலைவர் காளிதாஸ், இளைஞரணி மாவட்ட தலைவர் மோடி முனீஸ், மாவட்ட செயலர் வராஹி சுதாகர், மண்டபம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் கதிரவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரவி, ஒன்றிய துணைத்தலைவர் பி.பாலசுப்ரமணியன், மீனவர் பிரிவு மாவட்ட செயலர் எஸ்.மகேஷ், மீனவர் பிரிவு மண்டபம் ஒன்றிய தலைவர் ஆர்.மணிகண்டன், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாவட்ட செயலர் என்.கண்ணன், இதர பிற்பட்டோர் அணி ஒன்றிய பொதுச்செயலர் பூபாலன், சேவா பாரதி மாநில அமைப்பாளர் முனியசாமி, ஒன்றிய செயலர் இலங்கேஸ்வரன், மண்டபம் கிளை தலைவர்கள் ஞான சங்கர், கே.தில்லை சந்துரு, ஜெயராமன், முருகேசன், ஆறுமுகம், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரத்த கொடையாளர்களுக்கு மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நகரின் முக்கிய வீதிகளில் பாஜக கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு, உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image