தமிழக முதல்வர் செப்.22, 23ல் தென் மாவட்டங்களில் ஆய்வு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செப்.22, 23ல் தென் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவுள்ளார். ஆய்விற்காக செப்.22 காலை 7 மணியளவில் மதுரையில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9:30 மணியளவில் ராமநாதபுரம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3:30 மணியளவில் தூத்துக்குடி ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஆய்வு கூட்டம் நிறைவுக்குப் பின் கார் மூலம் நாகர்கோவில் சென்று இரவு தங்குகிறார். செப்.22
காலை 9:30 மணியளவில் நாகர்கோவில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3:30 மணியளவில் விருதுநகர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கூட்டம் நிறைவுக்கு பின் அன்றிரவு சேலம் செல்கிறார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image