தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட போராளி தியாகி இரட்டைமலை சீனிவாசன் 75 ஆவதுநினைவு தினம் – விசிக வினர் மாலை அணிவித்து மரியாதை

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உரிமைகளை மீட்டுத் தந்த வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பஞ்சமி நிலங்களைமீட்டுத் தந்த போராளியுமான தியாகி இரட்டைமலை சீனிவாசன். 75 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.அவருடைய நினைவு தினத்தைகடைபிடிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.அந்த வகையில் மதுரை தபால் தந்தி நகர் அருகே உச்சபரம்பு மேடு பகுதியில்மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அலங்கைசெல்வராஜ் தலைமையில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு முன்னிலையில் இரட்டைமலை சீனிவாசன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அமுதன் ஒன்றிய கவுன்சிலர் கார்வண்ணன் மண்டல செயலாளர் கண்ணதாசன்மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மகளிரணி செல்வி செல்லப்பாண்டியன் வழக்கறிஞர் சக்திவேல் பாண்டியன் பூதகுடி மணியரசு அரச முத்துப்பாண்டியன் அதிவீரபாண்டியன் ஊர்சேரி பரமசிவம் முடுவார்பட்டி கடல் கேசன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image