கீழக்கரை நகராட்சி அலுவலகமா?? இல்லை நாய்களின் கூடாரமா….வீடியோ காட்சிகள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. ஆனால் இதை கண்டுகொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் நாய்கள் நகராட்சி அலுவலகத்திலேயே கூடாரம் இட்டு அப்பகுதியில் வரும் பொது மக்களை அச்சுறுத்த செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்து கீழக்கரையை சேர்ந்த பச்சிளம் பாலகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீண்டும் கீழக்கரை பகுதி முழுவதும் அதிக அளவில் குறிப்பாக நோயுற்ற நாய்கள் வீதிவீதியாக சுற்றி திரிகிறது இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நாய்களை பிடிக்குமாறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image