Home செய்திகள் சிறப்பாக பணியாற்றிய வனத்துறையினருக்கு விருது வழங்கி பாராட்டிய தென்காசி எஸ்பி

சிறப்பாக பணியாற்றிய வனத்துறையினருக்கு விருது வழங்கி பாராட்டிய தென்காசி எஸ்பி

by mohan

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தலையணையில் சிறப்பாக செயல்பட்ட வனத்துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் விருது வழங்கி பாராட்டினார்.தமிழ்நாடு வனத்துறை மற்றும் பொதிகை இயற்கை சங்கம் இணைந்து சிவகிரி அருகேயுள்ள தலையணை மலைவாழ் குடியிருப்பில் இலவச பல்சிகிச்சை முகாமை நடத்தியது. இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட காவல்துறை கணகாணிப்பாளர் சுகுணாசிங் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் பி.கே.ஸ்டாலின், சிவகிரி வனச்சரக அலுவலர் டி.சுரேஷ், பொதிகை இயற்கை பாதுகாப்பு குழு தலைவர் ஷேக் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வள்ளியூர் பல் மருத்துவர் கார்த்திக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தலையணை மலைவாழ் குடியிருப்பில் உள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச பல் சிகிச்சை அளித்தனர். பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சங்கரன்கோவில் வனச்சரகம் தலையணை வேட்டைத் தடுப்பு முகாமில் சிறப்பாக பணியாற்றிய வனப்பணியாளர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் விருது வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார்.முகாமில் வனவர்கள் பி.முருகன், உபேந்திரன், அசோக்குமார், பூவேந்திரன் (பயிற்சி) மற்றும் சிவகிரி, சங்கரன்கோவில் சரக வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!