Home செய்திகள் மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் மறைவு பத்திரிக்கை துறையின் பேரிழப்பு; (WJUT) தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது! மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயாராஜ்..!

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் மறைவு பத்திரிக்கை துறையின் பேரிழப்பு; (WJUT) தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது! மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயாராஜ்..!

by Askar

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக மறைந்த மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்…

தமிழக பத்திரிகை உலகில் மூத்த பத்திரிகையாளரான திரு.சுதாங்கன் (வயது 63 ) அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அன்னாரது மறைவுக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த சுதாங்கன் அவர்கள் திசைகள் இதழில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கி, குமுதம் பத்திரிகையில் பகுதி நேர நிருபராகப் பணியாற்றினார்.

1982 இறுதியில் விகடன் நிறுவனத்தில் புதிதாக துவங்க இருந்த ஜூனியர் விகடனின் முதல் நிருபராக சேர்ந்த சுதாங்கன் பத்து ஆண்டுகள் பணி புரிந்து வந்தார். அவரது சேவையால்1986ம் ஆண்டு கிராமப்புற செய்திகளுக்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றார்.

80களில் தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்ட பெருமையும் திரு.சுதாங்கனையே சேரும். அதேபோன்று எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என தைரியமாக கள நிலவரங்களை செய்தியாக்கிய வரும் இதே சுதாங்கன் தான். அதற்கு அன்றைய அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்தபோது முதல்வரின் தொகுதியில் நலப்பணிகள் நடக்கவில்லை என்பதை வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளியிட்டார். சுதாங்கன் கூறிய உண்மையை ஏற்றுக் கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். தொகுதிக்கான நலப் பணிகளை செய்ய உத்தரவிட்டார் என்பது வரலாறு.

தினமணி நாளிதழில் பொறுப்பாசிரியராகவும், இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராகவும், விஜய், ராஜ், ஜெயா தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகனாகவும் பணிபுரிந்த இவருக்கு உண்டு.

திரு.சுதாங்கன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. அவரது இழப்பு குடும்பத்தினருக்கும், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் மீளா துயரத்தை அளித்துள்ளது.

இவன்,
சகாயராஜ்,
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்,
சென்னை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!