Home செய்திகள் நீட் தேர்வு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அன்பான வேண்டுகோள்..!

நீட் தேர்வு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அன்பான வேண்டுகோள்..!

by Askar

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்வது மனவேதனையும் வருத்தத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது, மாணவர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் தற்கொலை மட்டுமே தீர்வாகாது.

எத்தனையோ பாடப்பிரிவுகள் இருக்கின்றன அதிலும் கவனம் செலுத்தி அந்தந்த துறையை தேர்வு செய்து பயின்று அதிலே சாதனையாளர்களாக தேர்வடையளாம் மாணவர்களை பெற்றோர்களும் நன்கு புரிந்துக் கொண்டு மாணவர்களின் மனநிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

மத்திய அரசு ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் உலகத்தையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா மேலைய நாடுகளையே கதிக்கலங்க வைத்துள்ளது , இந்தியாவிலும் வேகமாக பரவி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது இருந்தபோதிலும் பெருமளவில் குணமடைந்து வருகின்றனர். இது பல மேலைய நாடுகள் மத்தியில் ஆச்சியத்தையும் வியப்பையும் ஏற்ப்படுத்தியுள்ளது .

இந்திய பிரதமர் நரேந்திர மோதி பெருமையோடு பாராட்டுகிறார் இதற்கு யார் காரணம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். நீட் தேர்வு எழுதாத மருத்துவர்கள் தான் என்று புரிந்துக் கொள்ள வேண்டும் , நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளது ஏழை மாணவர்கள் மட்டுமே , நீட் பணக்காரர்களுக்கு மட்டு பொருந்தும் ஏழைகளுக்கு எட்டா கனியே நீட் தேர்வு பற்றி மத்திய அரசும் சிந்திக்க வேண்டும் ஏழை மாணவர்கள் நலன் கருதி.

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!