தனியாா் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.!

தனியாா் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கம் வட்டம், விண்ணவனூா் கிராமத்திலிருந்து பீமானந்தல் செல்லும் 50 மீட்டா் அகலச் சாலையில் தனியாா் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகத் தெரிகிறது.இதனால், அந்த வழியாகச் செல்லும் கிராம மக்களுக்கு சாலை போதுமான வசதி உள்ளதாக இல்லை.இதனால், ஆத்திரமடைந்த பீமானந்தல் மற்றும் பீமானந்தல் கொல்லை கொட்டாய் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திரண்டு வந்து, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரிசெய்யவேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.தகவலறிந்து செங்கம் டிஎஸ்பி சரவணகுமரன், காவல் ஆய்வாளா் சாலமோன்ராஜா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் பிச்சாண்டி, ஒரு வார காலத்தில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரிசெய்து தருவதாக உறுதியளித்தாா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..