சாக்கடை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட புலவர் அப்பா தர்ஹா அருகில் உள்ள சந்தை திடல் பின்புறம் கழிவுநீர் தேங்கி சாக்கடை குளம் போல் உள்ளது.இதனை பலமுறை பேரூராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றும் நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ளது.மேலும் சதக்கத்துல்லா அப்பா தெரு மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.சிலநேரங்களில் கழிவு நீர் அதிகமாகி ரோட்டில் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.வரும் காலம் மழை காலமாக இருப்பதால் சாக்கடை கழிவுகள் மூலம் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.தற்பொழுது கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருக்கும் சூழ்நிலையில் மேலும் மக்களுக்கு பாதிப்பு உண்டாகாமல் சாக்கடை கால்வாய்களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image