நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவுத் தொடக்க அரங்கம்-சர்வதேச தமிழ் அமைப்புகள் பங்கேற்பு…!

நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவுத் தொடக்க அரங்கம்-சர்வதேச தமிழ் அமைப்புகள் பங்கேற்பு…!

நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவுத் தொடக்க அரங்கம் நிகழ்ச்சி செப்டம்பர்.12 சனிக்கிழமை இணைய வழியாக நடைபெற உள்ளது.

இதில் பொதிகைத் தமிழ்ச் சங்கம், தமிழ் ஆர்வலர்கள் குழு வட அமெரிக்கா, எம்.டி.எஸ்.நிகழ்வு மற்றும் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார வளர்ச்சி பேரவை இந்தியா, சிங்கப்பூர், யு.எஸ்.ஏ.ஆகிய சர்வதேச தமிழ் அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

இந்நிகழ்ச்சியில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இயக்குநர் (பொ)முனைவர் க. பசும்பொன் தலைமையுரை வழங்குகிறார். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே. இராசேந்திரன் (கவிஞர் பேரா)வரவேற்புரை வழங்குகிறார். நிகழ்ச்சியில், தமிழக அரசின் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சொல்லின் செல்வர் முனைவர் வைகைச் செல்வன் பேருரையாற்றுகிறார்.

மேலும் நிகழ்ச்சியில் தொடர்ந்து “பாரதிக்கோர் பாமாலை “என்ற அரங்கில் முனைவர் முகமது முகைதீன்,துபாய், சிங்கப்பூர் ஷர்மிளா, அமீரகம் கவிஞர் நாகா, வட அமெரிக்கா கவிஞர் சுரேஷ் பழனியாண்டி, மலேசியக் கவிஞர்கள் முகிலன், தேவதர்ஷினா கன்னியப்பன், இலங்கை இந்துஜா, மற்றும் இந்தியக் கவிஞர்கள் கோவை அன்புத்தோழி ஜெயஸ்ரீ, திருநெல்வேலி முனைவர் சரவண குமார் ஆகியோர் கவிதை வாசிக்க உள்ளனர். உலகத் தமிழாராய்ச்சி ஆய்வாளரும்,எம். டி. எஸ்.நிகழ்வு மற்றும் மேலாண்மை ஆலோசனை நிறுவன முனைவர் ரோகிணி நிறைவுரையும், வட அமெரிக்கா தமிழ் ஆர்வலர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ஆனந்தி சுப்பையா நன்றியுரையும் வழங்குகின்றனர். ஈரோடு கவிஞர் ஹரிணி தொகுப்புரை வழங்குகிறார்.

மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவுத் தொடக்க நிகழ்ச்சியில் அனைவரும் இணையத்தில் இணைந்திட வேண்டும் என நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் கவிஞர் பே. இராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..