ராமநாதபுரம் அருகே பள்ளி கட்டடம் திறப்பு விழா

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2016-17 ஆம் கல்வி ஆண்டு நிதி ரூ.11.80 லட்சம் மதிப்பில் சூரன்கோட்டை தொடக்கப் பள்ளி கட்டடத்திறப்பு விழா இன்று (09/9/2020) நடந்தது. விழாவிற்குசூரன்கோட்டை ஊராட்சி தலைவர் எஸ்.தெய்வநாதன் தலைமை வகித்தார்

. ராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் மு.ஜெயா, உஷா ராணி, ஊராட்சி துணைத்தலைவர் வெற்றி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரி வரவேற்றார். பள்ளி கட்டடத்தை முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில்தலைமை ஆசிரியைகள் தெஞ்சி முருகபுவனா (திம்மாபட்டி), செல்வ மீனாட்சி(மாடக் கொட்டான்), வி.குமரகுரு (சக்கரக்கோட்டை),ஜி.ஜெகதீஸ்வரன் (தொருவளூர்) கண்ணகி (முதுனாள்), ஜீவஜோதி (நொச்சிவயல்)வட்டார வள மைய கருத்தாய்வாளர்கள் ஸ்ரீதேவி, முருகன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன், சூரன் கோட்டை தொடக்கப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், வன்னி வயல் தொடக்கப் பள்ளி ஆசிரியர் வீரசேகரன், வைரவன் கோயில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் சரவணன், பெருவயல் காலனிதொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூரிதாஸ், பரந்தாமன், நொச்சிவயல் தொடக்கப் பள்ளி ஆசிரியை மரிய கிரேஸி,இளமனூர் தொடக்கப் பள்ளி ஆசிரியை சுமதி, சூரன்கோட்டை ஊராட்சி செயலர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சூரன்கோட்டை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஜீவரே கா நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..