உசிலம்பட்டியில் சாலையில் தவறவிட்ட பணம், தங்கசெயினை எடுத்து திருப்பி கொடுத்த பிச்சைக்காரருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமணையில் கம்பம் பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி (40) என்பவர் காலில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை செலவுக்காக அவரது உறவினர்கள் கம்பத்திலிருந்து காரில் வந்து மருத்துவமணை முன்பு இறங்கியபோது கையில் இருந்த மணிப்பரிசை சாலையில் தவறிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவமணைக்குள் சென்றபோது மணிப்பரிசு காணாமல் போனது தெரியவந்தது. இந்தப்பர்சில் ரூ10 ஆயிரம் பணமும் 2பவுன் தங்கச்சங்கிலியும் இருந்துள்ளது.ஆனால் காரில் வந்தபோது கையில் மணிப்பரிசு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் மருத்துவமணையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் காரிலிருந்து இறங்கியபோது மணிப்பரிசு தவறவிட்டதும், அந்த வழியாக சென்ற பிச்சைக்காரர் குப்பை என எடுத்து சென்றதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சியை வைத்து பிச்சைக்காரரை தேடி சென்ற நிலையில் பிச்சைக்காரர் குப்பைகளை கிளறும் போது பணம் மற்றும் தங்கசெயின் இருந்ததை பார்த்து; அங்கு அவரே வந்து மருத்துவமணை நிர்வாகம் மூலம் உறவினர்களிடம் ஒப்படைத்தார். இவர் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியைச் சேர்ந்த முருகன்(48) என்பதும் சாலையில் குப்பைகளை பொறுக்கி அதனை விற்று பிழைப்பு நடத்துவதும் தெரியவந்தது. பிச்சைக்காரரின் இந்த நேர்மையான செயலால் அவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..