ராமநாதபுரத்தில் 12 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

பள்ளிக்கல்வித் துறை சார்பாகராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.09.2020) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்பேசியதாவது:மாணவ மாணவியர் தங்களது பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவிடுகின்றனர். குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு கல்வியறிவு வழங்குவதுடன் , அவர்களது தனித்திறன்களை மென்மேலும் வளர்த்திடவும் தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தில் சிறத்த குடிமக்களாக உயர்த்திடவும் அயராது உழைக்கின்றனர். இத்தகைய ஆசிரியர்களை ரவிக்கும் விதமாக தமிழக அரசு ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய

திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கலா, சத்திக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரெ.சுரேஷ் குமார், திருப்புல்லாணி ஒன்றியம் பழஞ்சிறை அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.முத்துக்குமார், பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் தா.கு.ஜெயபிரகாஷ், பரமக்குடி ஆர்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் சீ.குப்புச்சாமி, கமுதி பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை அ. இந்தி ராணி, ராமநாதபுரம் ஏவிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.மதுசூதனன், கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞா.சுரேஷ்குமார், ராமநாதபுரம் ராஜா எம்.தினகர் ஆர்.சி.தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மா. ஆரோக்கிய மேரி, சித்தார்கோட்டை முகமதியா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை உ.சாஜிதா பானு, நயினார்கோவில் ஒன்றியம் அக்ரமேசி சரஸ்வதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மு.வளர்மதி, கங்கைகொண்டான் ஹமீதியா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நா.புஷ்பவள்ளி.12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது ஒவ்வொரு ஆசியர்களின் கனவு விருதாகும். நடப்பாண்டில் இவ்விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்பேசினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உ.திசைவீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் தெ.கல்பனாத்ராய்: மாவட்ட கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி,சோ.கருணாநிதி, மு.முருகம்மாள், பள்ளி துணை ஆய்வாளர்கள் எஸ்.ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, எம்.ஆனந்த் உட்பட அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..