Home செய்திகள் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையங்களுக்கும் இலவசமாக கிருமிநாசினி இயந்திரத்தை வழங்கி வரும் மதுரையைச் சேர்ந்த நிறுவனம்

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையங்களுக்கும் இலவசமாக கிருமிநாசினி இயந்திரத்தை வழங்கி வரும் மதுரையைச் சேர்ந்த நிறுவனம்

by mohan

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அரசோடு இணைந்து மக்களுக்கு பல நல்ல பணிகளை ஆற்றி வருகிறது .அதன் ஒரு பகுதியாக கிருமிநாசினி இயந்திரம் ,குறிப்பிடத்தக்க வகையில் மதுரையின் முக்கிய பகுதிகளான ஒருங்கிணைந்த எம்ஜிஆர் பேருந்து நிலையம் ,ஆரப்பாளையம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் அல்லாது கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வருபவர்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளிக்கும் வண்ணம் இயந்திரங்களை இலவசமாக வழங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள் மூலமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவின்போது மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் புறநகர் காவல் நிலையங்கள் ,அரசுத்துறை நிறுவனங்கள் என அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த கிருமி நாசினி இயந்திரத்தை இவர்கள் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.அதே போன்று தற்போது நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பேருந்து இயங்கத் துவங்குவதை யொட்டி பேருந்து நிலையங்களில் இந்த கிருமி நாசினி இயந்திரங்களை பொருத்தியுள்ளனர்.மேலும் இவற்றை கண்காணிக்கவும் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கும் தனியாக ஒரு குழுவையும் அமைத்து இருக்கின்றனர்

இதன் உரிமையாளர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்-லாப நோக்கத்தோடு இல்லாமல் தமிழக அரசு வழங்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் கைகளில் கிருமி நாசினி தெளித்து விட்டு தான் தங்களுடைய செயல்பாடுகளில் இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த இயந்திரங்கள் சாமானிய மக்களையும் சென்றடையும் வண்ணம் அவர்கள் அன்றாடம் வந்து செல்லக்கூடிய பகுதிகளில் இந்த கிருமிநாசினி இயந்திரம் பொருத்தப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார்.மேலும் ஆரம்பத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்  அவர்களை அணுகி இந்த இயந்திரத்தின் பயன்பாடு முதலியவற்றை தெளிவுபடுத்திய பிறகு உரிய அனுமதியோடு வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் அவர்களின் ஒத்துழைப்போடு இந்த இயந்திரத்தை அரசு அலுவலகங்களுக்கு வழங்கியதில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.மேலும் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின் போது கூட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடிய செவிலியர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் முகக் கவசங்கள் மற்றும் PPE கிட் ஆகியவை வழங்கி உள்ளோம் என்றார்.மேலும் இவர்களது தயாரிப்பு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய முக்கிய நிறுவனங்கள் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் இவர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஆட்டோக்களில் கிருமிநாசினிகள் தெளிக்க கூடிய ஒரு இயந்திரம் வைப்பதற்கான ஆலோசனையில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.தமிழக அரசு பொது மக்களுக்கு அறிவுரையும் ஆலோசனைகளும் ஒருபுறம் வழங்கி வந்தாலும் ,பொதுமக்களாகிய நாம் தான் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் .அந்த வகையில் இவர்கள் போன்ற தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து ஆட்கொல்லி நோயான இந்த கரோனாவை  விரட்ட கிருமி நாசினி எந்திரத்தை இலவசமாக வழங்கி வருவது பாராட்டுக்குரியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!