கம்பத்தில் சாலையில் கிடந்த தங்க மோதிரம் தவறவிட்டவரிடம் காவலர்கள் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் கம்பத்தில் சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை, வடக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து, தவறவிட்டவரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல்காதர், அப்துல் ரஹிம் இருவரும் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் சனிக்கிழமை நடந்து சென்றனர்.அப்போது சாலையில் 4 கிராம் தங்க மோதிரம் கிடந்தது, அந்த தங்க மோதிரத்தை எடுத்து அருகில் விசாரித்தனர்.சரியான தகவல் இல்லாததால் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கே.சிலைமணி மற்றும் காவலர்கள் வேலப்பர் கோவில் தெரு பகுதிக்கு சென்றனர்.விசாரணையில் கம்பம் உத்தமபுரத்தைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் மோதிரம் வாங்கி சென்றதும், அதை தவற விட்டு சென்றதும் தெரியவந்தது. முறையான ஆவணங்களை காட்டியதால் காவலர்கள் அவரிடம் மோதிரத்தை திரும்ப ஒப்படைத்தனர் முனியராஜ் நன்றி தெரிவித்தார்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image