Home செய்திகள் செங்கம் பகுதியில் விவசாய நிதியுதவித் திட்ட முறைகேடு: மகளிா்குழுத் தலைவி கைது.

செங்கம் பகுதியில் விவசாய நிதியுதவித் திட்ட முறைகேடு: மகளிா்குழுத் தலைவி கைது.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில் போலி பயனாளிகளைச் சோ்த்து முறைகேட்டில் ஈடுபட்டதாக மகளிா் சுய உதவிக் குழுத் தலைவியை போலீஸாா் கைது செய்தனா்.கடலூா், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பது அண்மையில் தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டிலும் இதுபோன்ற முறைகேடு நிகழ்ந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, தண்டராம்பட்டு வட்டம், பெருங்களத்தூரைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுத் தலைவி ஜீவாவை (50) சிபிசிஐடி காவல் ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.இவரிடம் நடத்திய விசாரணையில், விவசாய நிலமில்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஜீவா நிதியுதவி பெற்றுத் தந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.இதனிடையே, தண்டராம்பட்டு பகுதியில் கடந்த 1-ஆம் தேதி தலா ரூ.2 ஆயிரம் விவசாய ஊக்க நிதி செலுத்தப்பட்ட 2,488 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் செங்கம் சரவணகுமா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!