மதுரை-கடைகள் மற்றும் ஹோட்டல்களின் நேரக்கட்டுப்பாட்டை நீக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, கோரிக்கை.

வெள்ளையன் அவர்கள் மற்றும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க மாநிலத் தலைவர் இனிக்கோ இருதயராஜ் அவர்களின் பரிந்துரையின் பேரிலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள பி.டி.ஆர் வளாகத்தில் மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையில், மாநில இணைச்செயலாளர் பி.டேனியல் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் பொன்சங்கர், கொள்கை பரப்புச் செயலாளர் கனிபாலன் முன்னிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் பி.டேனியல் தங்கராஜ், மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் கூறும்போது:- இ-பாஸ் ரத்து செய்ததற்கும், தமிழகம் முழுவதும் 7ம் தேதி பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதி கொடுத்ததற்காகவும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ததற்காகவும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மதுரை மாவட்டம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்மேலும் மாண்புமிகு முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எங்களுக்கு கோரிக்கை என்னவென்றால், முழுநேரம் பேருந்து இயங்கும் பட்சத்தில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வரும் பயணிகள் பசியால் வாடும் சூழ்நிலை ஏற்படும் என்ற காரணத்தினால் ஹோட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகளின் நேர கட்டுப்பாட்டை தளர்த்தும் பட்சத்தில் கூட்ட நெரிசல் குறைந்து நோய் தொற்று பரவாமல் இருக்க வாய்ப்பு உள்ள காரணத்தினால் தமிழக முதல்வர் அவர்கள் மறுபரிசீலனை செய்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி ஹோட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகளின் நேரக்கட்டுப்பாட்டை நீக்கும்படி தாழ்மையுடன் இருகரம் கூப்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் மதுரை மாவட்ட கொள்கை பரப்பு துணை தலைவர் ஆறுமுகம் மாவட்ட கொள்கை பரப்பு இணைச் செயலாளர் அப்துல் மஜீத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் சிறுபான்மை பிரிவு மதுரை மாவட்ட செயலாளர் ஸ்டீபன் ராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..