இராஜசிங்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்துவது மற்றும் 108 அவசர ஊர்தி வசதி செய்து தரக் கோரிக்கை:

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் தாலுகா இராஜசிங்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்துவது மற்றும் 108 அவசர ஊர்தி வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் பாதை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கோரிக்கை விடுத்துள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் புதிதாக உருவாக்கப்பட்ட இராஜசிங்கமங்கலம் தாலுகா கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இராஜசிங்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.இவ்வூரைச் சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக இராஜசிங்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். சுற்றுவட்டார கிராம மக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ வசதி கிடைக்காததால் திடீர் மரணத்தை தழுவுகின்றனர். இங்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால் உடல் நலக்குறைவு ஏற்படும் போது 35 கிலோமீட்டர் சுமார் 1மணி நேரம் பயணம் செய்து இராமநாதபுரம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதற்கான 108 அவசர ஊர்தி வசதியும் இங்கு இல்லை. இதனால் தனியார் வாகனத்தை அணுக வேண்டியுள்ளது. அவர்கள் அதிகப்படியான கட்டணம் கேட்பதால் ஏழைகள் பணம் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.எனவே மேற்காணும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இராஜசிங்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை போதுமான மருத்துவ வசதிகளுடன் தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனையாக மாற்றி அவசரகால சிகிச்சைப்பிரிவு, மற்றும் 108 அவசர ஊர்தி வசதியும் செய்து தருமாறு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..