Home செய்திகள் உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 165 நாட்களுக்கு பிறகுஅனுமதி- ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு.

கொரோனோ பாதிப்பு காரணமாக உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கடந்த மார்ச் 20ம் தேதி முதல் 165 நாட்களாக பக்தர்கள் இன்றி பூஜைகள் மற்றும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நிலையில் 165 நாட்களுக்கு பின்னர் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் கோவிலுக்குள் பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் மக்கள் அனுமதிக்காக 5 வழிகள் இருந்த போதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி என்பதால் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் பொது மக்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

10 வயது சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை, கோவிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், பொதுமக்கள் கோவிலின் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும், எந்த இடத்திலும் உட்கார அனுமதி இல்லை, கோவிலுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், தானியங்கி சானிடைசர் கருவி பொருத்தப்பட்டு கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவிலின் உள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தேங்காய், பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை. பக்தர்களுக்கு குங்குமம், விபூதி பிரசாதம் அர்ச்சகர்கள் நேரடியாக வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. தாங்களாகவே எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இன்று வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து எதிர்வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரானா ஊரடங்கு தடை உத்தரவு நீங்கியதால் கோயில் நடை திறக்கப்பட்டது .இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் கால்களை கழுவிய பின்பு கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.கோவிலில் நிர்வாகம் சார்பில் காய்ச்சல் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு சானி டைசர் வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.,பின்னர் கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் அலங்காரப் பொருட்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!