
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அலிகார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிமிண்டுக்கல் சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும்.இப்பகுதியில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் சாலையை கடந்து செல்லும்போது வேகத்தடை இல்லாத காரணத்தினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.பூவாணிக் கரை, பிரிட்டோ மழலையர் தொடக்கப்பள்ளி, பள்ளிவாசல் ஆகிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது.பள்ளிக் குழந்தைகள் ரோட்டை கடந்து செல்லும்போது விபத்துக்கள் நடக்கிறது.எனவே முன்னெச்சரிக்கையாக வாகன விபத்துகளை குறைப்பதற்கு வேகத்தடை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்